Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13 ஆம் திகதி விடுமுறை இல்லை; ஆசிரியர்கள் கவலை!

13 ஆம் திகதி விடுமுறை இல்லை; ஆசிரியர்கள் கவலை!

3 years ago
in செய்திகள்

வடக்கு கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்படாமை தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிறு (12) தீபாவளி தினமாகும். தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (13) மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் ஆகியவற்றுக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவை தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தி குறிப்பில், எதிர்வரும் ஞாயிறு (12) தீபாவளி தினமாகும். மறுநாள் திங்கள் அலுவலக நாளாகும். உலகத்தில் வாழும் பெருமாலான இந்துக்களுக்கு தீபாவளி தினமும் கௌரி விரதமும் மிகமுக்கியமானவை.

கௌரி விரதம் அனுஸ்டிக்கும் அடியார்களுக்கு திங்கள் கௌரி காப்பு வழங்கும் தினமாகும். மறுநாள் பாறணை நாள்.

திபாவளிக்கு மறுநாள் பதில் பாடசாலையுடன் விடுமுறை வழங்குமாறு கேட்கப்பட்ட வேண்டுகோள் இந்துத் தமிழர் செறிந்து வாழும் இடங்களின் அமைச்சுக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதற்காக சங்கம் கவலை தெரிவித்து அதிபர் ஆசிரியர்களில் பெருமளவானவர்கள் பெண்கள் என்பதோடு பாடசாலை மாணவர்களில் விரதம் அனுஸ்டிக்கும் மாணவிகளும் அதிகம் என்பதையும் வெளிக்காட்டியுள்ளது.

மாறாக விடுமுறை தேவையான பாடசாலைகளுக்கு அப்பாடசாலைகளின் அதிபர்கள் திங்களுக்கான விசேட விடுமுறையை வலயக் கல்வித் திணைக்களங்களிடம் அனுமதி பெற்று பதில் பாடசாலைக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான வழிமுறை உள்ளது. என்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பாடசாலைகளின் அதிபர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, பாரம்பரிய மத கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பது எமது எல்லோருடைய கடமையுமாகும் என சங்கம் வினயத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மட்டக்களப்பிலிருந்து வவுனியா சென்ற வேன் விபத்து!

மட்டக்களப்பிலிருந்து வவுனியா சென்ற வேன் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.