மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறிய குறியேற்றம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்புக்காக வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மகாவலி அதிகார சபைக்கும் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று(10) விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் குறித்த வழக்கு நேற்று(10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
மகாவலி சார்பாகவும் மற்றும் அத்துமீறி குடியேறிய குற்றம் சுமத்தப்பட்ட தரப்பு பிரதிவாதிகள் சார்பாகவும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது அறிக்கைகளை மன்றுக்கு சமர்ப்பித்திருந்தனர்.
கடந்த வழக்கில் குறித்த 13பேரும் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் வசித்ததற்கான சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தெரிவிருந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வாதங்களையும் சாட்சியங்களையும் நெறிப்படுத்திய நீதிபதி வழக்கு தீர்ப்புக்காக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.