பெயரளவில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் விவசாய துறைக்கான இணைப்பாளர் பிரகாஸ் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். விவசாயத்துறையினை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவேண்டுமானால் விவசாயத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2500மில்லியன் ரூபா நிதி போதுமானதாகயில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றக்காரர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையினை அரசாங்கம் நிறைவேற்றி நீதிமன்றத்தின் கௌரவத்தினை பாதுகாக்குமாறும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது,அதன் செயற்பாடுகள் சரியாக இயங்குகின்றது என்பதை நீதியமைச்சு நிரூபிக்கவேண்டுமானால் அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்றுமாறு நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பினை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.