Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண ஜனாதிபதி இந்தியா விஜயம்?

தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண ஜனாதிபதி இந்தியா விஜயம்?

3 years ago
in செய்திகள்

மாகாண சபைகள் தேர்தலுக்கான திகதி, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் திட்டம் என்பவற்றுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா – புதுடில்லிக்கு பயணமாகவுள்ளார் என்று ஜனாதிபதி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி பயணம் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை இந்தப் பயணம் நிகழும் என்று ஜனாதிபதி பிரதி நிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி புதுடில்லி செல்வதற்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யின் அழைப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் அண்மையில் இலங்கை வந்தபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்தார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இந்திய இல்லத்தில் இரவு விருந்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல
ரத்நாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட புதுடில்லி ஆர்வமாக இருப்பதாக இந்திய தரப்பு குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணமாக பல முயற்சிகளை செய்தார். ஆனால், அவரை வரவேற்க இந்தியா விரும்பியிருக்கவில்லை. இதனால், இந்த சந்திப்பு நிகழவில்லை. ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் இந்தியதரப்புடனான உறவில் விரிசல் காணப்பட்டிருந்தது. சீன உளவுக் கப்பல் அம்பாந்தோட்டைக்கு வருகை தந்தமை அந்த விரிசலை மேலும் அதிகப்படுத்தியது. எனினும் அண்மைக்காலமாக ரணில் விக்கிரமசிங்க – இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட முன்னெடுத்த முயற்சிகளால் இந்தியா ஜனாதிபதிக்கு அழைப்பை அனுப்பிய தாகக் கூறப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில்!

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு