Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திருச்செந்தூர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு!

மட்டு திருச்செந்தூர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. நேற்றையதினம் கந்தசஸ்டி கும்பம் சொரிதலுடன் நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு,ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை சிறப்பாக நடைபெற்றது. ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஸ்டி விரதம் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது.

முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்று வந்தன. ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.

சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்தது. தமிழர்களின் கலாசார பண்பாட்டு இசைவாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சூரன்போர் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூதப்படை சூழ முருகப்பெருமான் ஊர்வலமாக சென்று சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
நேற்று காலை கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வாக கும்பம்சொரியும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆறு தினங்களும் விரதம் இருந்தவர்கள் நேற்றைய தினம் தமது வழிபாடுகளில் ஈடுபட்டு தமது விரதத்தினை நிறைவு செய்தனர்.

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு; திரையுலக பிரபலங்கள் கண்டனம்!

திரிஷா பற்றிய மன்சூர் அலி கான் பேச்சு; திரையுலக பிரபலங்கள் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு