Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் அதிக சத்தத்துடன் வாகனம் செலுத்தும் இளைஞர்கள் தொடர்பில் நடவடிக்கை!

காத்தான்குடியில் அதிக சத்தத்துடன் வாகனம் செலுத்தும் இளைஞர்கள் தொடர்பில் நடவடிக்கை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மோட்டார் வாகனங்களில் சைலன்ஸர் குழாய்களினை அகற்றி பெரும் சப்தத்துடன் பயணிப்பவர்களை பொது மக்களின் உதவியுடன் கைது செய்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதென மட்டக்களப்பு காத்தான்குடி பொலிசாருக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் றஊப் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், காத்தான்குடியின் போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் பற்றியும் இளைஞர்களது செயற்பாடுகள் பற்றியும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனடிப்படையில், மோட்டார் வாகனங்களில் சைலன்ஸர் குழாய்களினை அகற்றி பெரும் சப்தத்துடன் பயணிப்பவர்களினை பொது மக்களின் உதவியுடன் கைது செய்வதெனவும், அவ்வாறு சைலன்சர்களினை அகற்றும் மோட்டார் வாகன திருத்துமிடங்கள் இனம் காணப்பட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. கடற்கரை மற்றும் கடற்கரை பிரதான வீதி ஆகியவற்றில் போக்குவரத்து நடைமுறைகளை கன்டிப்பாக அமுல்படுத்துவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது, இரவு, நள்ளிரவு நேரங்களில் அநாவசியமாக வீதிகளில் உலாவுகின்ற இளைஞர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, திருமண வைபவங்களின் போது பொதுப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக சப்தத்துடன் ஹோன் எழுப்புபவர்களை கைது செய்வது, போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பாக தீவிர கண்காணிப்பினை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த விடயங்களில் பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பினை பொலிசாருக்கு வழங்க வேண்டுமெனவும் பொலிசார் கேட்டுக் கொண்டனர். கலந்துரையாடலில் பாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.என்.காரியவசம், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றஹீம், மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி சந்தன, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் சபீல் நழீமி, நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
Next Post
லண்டனில் நடந்த தமிழீழத் தேசியக்கொடி நாள்!

லண்டனில் நடந்த தமிழீழத் தேசியக்கொடி நாள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு