வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு யோசனைகளை முன்வைத்துள்ளது.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத சம்பளம் மற்றும் ஏனைய தொழில்சார் பிரச்சினைகள் காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளமையினால் இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இந்த பிரேரணையின் பிரகாரம், முதன்முறையாக சேவையில் சேரும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தை எழுபத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது வைத்தியர் ஒருவருக்கு ஆரம்பகட்ட சம்பளமாக 54000 ரூபாய் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.