மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கார்த்திகை 27, நாளையதின ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போது கொக்கட்டிச்சோலை பொலிசார் அங்கு சென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் பட்டிப்பளை பி்ரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்லிங்கம் இருவரிடமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானால் கையொப்பம் இடப்பட்ட தடை உத்தரவு கட்டளை கையளித்து துயலும் இல்லத்தில் மாவீரர் நினைவு வணக்க ஏற்பாடுகளை செய்யவிடாமல் தடுத்தனர்.
அந்த தடை உத்தரவில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், தமிழ்தேசிய மக்கள் முன்னணி த. சுரேஷ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட 19, பெயர்கள் அந்த கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தாலும் வாகரை பொலிசார் வாகரை கண்டலடி துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் செய்யவிடாமல் 23, பெயர்களை குறிப்பிட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.