Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசா உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐநா பொதுச்சபையில் இலங்கை வாக்களித்தது

காசா உடனடி போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐநா பொதுச்சபையில் இலங்கை வாக்களித்தது

1 year ago
in செய்திகள்

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று முன்தினம் (13) கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து மோதல் நடந்து வருகிறது.

இந்த போரில், காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின், பொதுச் சபையில் ஸ்பெயின் சார்பில் போர் நிறுத்த தீர்மானம் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தின் உள்ளடக்கங்களாக, நிரந்தர போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும், பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில், 193 உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில், 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

12 நாடுகள் எதிராக வாக்களித்தன.

இந்தியா உட்பட, 19 நாடுகள் வாக்களிப்பைத் தவிர்த்தன.

இந்த நிலையில், தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளியிட்ட, ஐக்கிய நாடுகளின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ், “இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் ஆரம்பிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்களிப்பை இந்தியா தவிர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
இந்தியாவில் இன்று அதிகாலை ஹெலிகொப்டர் விபத்து; ஏழு பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இன்று அதிகாலை ஹெலிகொப்டர் விபத்து; ஏழு பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு