விடுதலைப்போராட்டத்தையும் விடுதலைப்புலிகளையும் கூறிகூறி தேர்தல்களில் வாக்குப்பெறுவோர் மக்களுக்கு ஒரு பிரச்சினையொன்று வரும்போது ஓடிஒழிவதற்கான காரணத்தை மக்கள் மனிதில்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தொழில்நுட்ப அறிவு கூடிய நேரத்திலேயே பொலிஸாரின் அடாவடித்தனங்கள் இவ்வாறு இருக்கின்றது என்றால் 2009 மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் அவர்களின் அராஜகம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது நேற்றைய தினம் தெளிவாக தெரிந்தது.
2019ஆம் ஆண்டு அன்று 69இலட்சம் சிங்கள மக்களின் பெரும்பான்மையில் கோட்டபாய ராஜபக்ஸ புதிய ஜனாதிபதியாக கடமையேற்ற காலத்தில் இல்லாத அராஜகம் 2023ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் நடந்திருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அங்கு எஞ்சியிருந்த கற்களைக்கொண்டு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு சிறிய நினைக்கல் கட்டிய நிலையில் வனஇலாகாவுக்கு உரிய காணியென்று கூறி பொலிஸ் வாகனங்களை கொண்டுசென்று அந்த கல்லறைகளை இடித்திருந்தார்கள்.இதேபோன்று வாகரை கண்டலடி துயிலும் இலத்திலும் நள்ளிரவு ஒரு மணியளவில் இனந்தெரியாதவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களினால் சேதங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். நேற்று நீதிமன்றின் ஊடாக விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட சின்னங்கள் கொடிகள் இல்லாமல் அஞ்சலிகளை செலுத்தலாம் என அனுமதிக்கப்பட்டிருந்தது.ஆனால் அவ்வாறு தரவையில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வின்போது மட்டக்களப்பில் இருக்கும் பல பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் பொறுப்பதிகாரிககள்,உயர்பொலிஸ் அதிகாரிகள்,இராணுவத்தினர்,இராணுவ கவச வாகனங்கள் , கலகமடக்கும் பொலிஸாருடன் ஒரு அராஜகமான நிலை அங்கு காணப்பட்டது.இவ்வாறான நிலையிலேயே அங்கு அஞ்சலி செலுத்தும் மக்களுக்காக நான் அங்கு சென்றிருந்தேன்.
6.05மணிக்கு விளக்கு ஏற்றுவதற்காக நான் உள்ளே சென்றபோது பொலிஸ் அதிகாரிகள் அங்கு வந்து அந்த நிகழ்வினை குழப்புவதற்கான முயற்சிகளை எடுத்தார்கள்.நாங்கள் நீதிமன்ற கட்டளையினை மீறாமல் நிகழ்வுகளை செய்கின்றோம் என்று கூறியபோது ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதிபெறவில்லையென்று பொலிஸார் மிகவும் காரசாரமாக பேசினர். பி.ப 6.05ற்கு அந்த இடத்தில் அஞ்சலி செலுத்துவதே எங்களுடைய பிரதான நோக்கமாக இருந்ததே தவிர பொலிஸாருடன் முரண்படுவது இரண்டாவது விடயமாக இருந்தது. பி.ப 6.05ற்கு நாங்கள் அஞ்சலி செலுத்தியதன் பிறகு பொலிஸார் கொடிகள் எல்லாவற்றையும் கழற்றினர். அதன் பின்னர் கையில் பொல்லுகளுடன் உள்ளே வந்த 50ற்கும் மேற்பட்ட கலகமடக்கும் பொலிஸார் அந்த இடத்தில் அதிகளவில் கூடியிருந்த வயோதிபர்கள், பெண்கள், அங்கவீனர்கள் ஆகியோரை பொல்லைக் காட்டி விரட்டுமளவிற்கு கேவலமாக நடந்துகொண்டனர்.
ஆதன் பின்னர் வெளியே வந்து பார்த்தபோது கவசர் வாகனங்கள் இரண்டு,பொல்லுகளுடன் நூற்றுக்கணக்கான இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்டுப் பிரதேசத்திலே இருட்டான சமயத்திலே அவர்கள் எங்களை தாக்குவதற்காகத்தான் வந்தார்களா? ஊடகங்கள் இல்லாதிருந்திருந்தால் மக்களுக்கு எதுவும் தெரியாமல் போயிருக்கும். ஏவ்வாறிருந்தாலும் நாங்கள் அஞ்சலி நிகழ்வை செய்திருந்தோம். இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக துணிச்சலாக வருகை தந்த அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
வட மாகாணத்தில் இந்த நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் கிழக்கில் மிகவும் சவாலான நிலையே காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். இங்கிருக்கின்ற நான்கு துயிலும் இல்லங்களுக்கு நாங்கள் நால்வரும் சென்றிருந்தால்கூட பொலிஸாரின் கெடுபிடிகளை கட்டுப்படுத்தியிருக்கலாம். துரதிஷ்டவசமாக நான் மட்டுமே இந்த நிகழ்வுகளில் அக்கறை எடுத்து சமூகமளிக்கும் வகையிலிருந்தது. இன்னொருவர் அறிக்கை கொடுத்திருந்தாலும் கூட மக்களுக்கு பாதுகாப்பாக அந்த இடத்தில் சமூகமளிக்காதது கவலையானதொரு விடயம். முட்டக்களப்பு மக்கள் இதனை கவனமாக மனதில் பதித்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் தேர்தல் காலம் வந்தால் இவர்கள் விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் தாங்கள் தமிழ் மக்களுக்காக செயற்படுபவர்கள் என்பதையும் சொல்லி சொல்லி மக்களின் வாக்குகளை எடுப்பார்களே தவிர மக்களுக்கு இவ்வாறானதொரு பிரச்சினை வரும்போது விடுதலைப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டோர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வுகள் வரும்போது இவர்கள் ஓடி ஓளித்துக்கொள்வதற்கான காரணம் என்ன என்பதையும் மக்கள் மனதில் கவனமாக பதித்துக்கொள்ள வேண்டும். சிலர் அந்த இடத்திலே அஞ்சலி செலுத்துவதற்கான காரணமே அவர்கள் தான். ஆவர்களுடைய செயற்பாடுகள் இராணுவத்துடன் அவர்கள் சேர்ந்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபட்ட அவர்கள் தான் மாவீரர்களாக ஒருசிலர் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களும் அவர்கள்தான். மேடைகளில் மட்டும் விடுதலைப்புலிகள் என்ற பெயரை பயன்படுத்துவார்கள் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்ளாததை மக்கள் மனதில்கொள்ளவேண்டும்.இவர்களில் நரித்தனமான போக்குகளை மக்களும் சிலநேரங்களில் மறந்துவிடுகின்றனர்.
துமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் செல்வராஜா எம்.பி.ஆகியோரை நான் பாராட்டுகின்றேன்.மட்டக்களப்பு,அம்பாறைக்கு வந்து சவாலான இடங்களில் மக்களுக்கு ஆதரவாக அவர்கள் செயற்பட்டார்கள்.அவர்களுக்கு இங்கு வாக்குவங்கி இல்லை,ஆதரவுகள் இல்லையென்று தெரிந்திருந்தாலும் மக்களுக்காக அவர்கள் இங்குவந்து மக்களுக்காக செயற்பட்டதை கட்சிபேதங்களுக்கு அப்பால் பாராட்டுகின்றேன்.தாண்டியடியில் மட்டும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறாமல்போயுள்ளது.அடுத்தவருடம் நான் மக்களுடன் நின்று அதனை முன்னெடுப்பேன். அனைத்து விடயங்களையும் பார்க்கும்போது இந்த வாரத்தில் வாகரை கண்டலடி தொடக்கம் பல இடங்களில் நடைபெற்ற கல்லறைகள் உடைப்பு போன்ற சம்பங்களின் பின்னால் விடுதலைப்போராட்ட காலத்தில் இராணுவத்துடன் இணைந்து காட்டிக்கொடுத்து இன்று அரசியல் ரீதியாக செயற்படும் சிலர்தான் இதற்கு பின்னால் இருந்துள்ளார்கள் என்பதை அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
வுhகரை,தரவை பகுதிகளில் உள்ள மக்களின் எதிர்ப்பு தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறாமலிருந்தால் நல்லம் என்ற வகையில் அவர்களின் கேவலமான சிந்தனையுள்ளது.வாகரையிலிருந்துவந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் குழு இதற்கு பின்னால் இருந்துள்ளதாக சில கருத்துகள் வெளிவருகின்றது.
நுல்லாட்சிக்காலத்தில் இவ்வாறான எந்த தடைகளும் இருக்கவில்லை.2015ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறான சுதந்திரம் இருந்தது என்பதை மறந்து அந்த தேர்தல் காலத்தில் செயற்பட்டார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பு,இலங்கை தமிழரசுக்கட்சி எப்போது பலமாகயிருக்கின்றதோ அக்காலப்பகுதியில் இவ்வாறான பிரச்சினைகள் குறைவாகயிருக்கும்.