Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ருவிற்றரில் குருவிக்கு பதிலாக நாய் படம்; மாற்றினார் எலான் மஸ்க்!

ருவிற்றரில் குருவிக்கு பதிலாக நாய் படம்; மாற்றினார் எலான் மஸ்க்!

3 years ago
in உலக செய்திகள்

ருவிற்றர் சமூகவலைத்தள செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.ருவிற்றர் என்றாலே நினைவுக்கு வருவது நீல நிறக் குருவிதான். ஆனால் அந்தக் குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின்
படத்தை லோகாவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இருப்பினும் ருவிற்றர் மொபைல் பதிப்பில் இந்த மாற்றம் அமுல்படுத் தப்படவில்லை.

கடந்த ஆண்டு ஒக்ரோபரில் 44 பில்லியன் டொலருக்கு ருவிற்றர் தளத்தை வாங்கி இருந்தார் மஸ்க். அது முதல் பல்வேறு மாற்றங்களை அவர் மேற் கொண்டு வருகிறார். ப்ளுர டிக் கட்டண சந்தா முறை தொடங்கி பல மாற்றங்கள் இதில் அடங்கும். தளத்தில் தொழில்நுட்ப மாதிரி யான அம்சங்கள் மட்டுமல்லாது நிர்வாக ரீதியாகவும் மாற்றங் களை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு நடவடிக்கையும் இதில் அடங்கும்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ருவிற்றர் செயலியின் லோகோவையே மாற்றி அதிரடி காட்டியுள்ளார் எலான் மஸ்க்.

ருவிற்றரின் லோகோவை ஏன் மாற்றினார் என்பதற்கும் எலான் மஸ்க் தனது ருவிற்றர் பக்கத்தி லேயே விளக்கமளித்துள்ளார்.முன்னர் ஒரு பயனர் தன்னிடம் ருவிற்றர் லோகோவை 2
‘Doge’ படமாக மாற்றக் கூறியதால் தான் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்த உரையாடல் நடந்துள்ளது. அப்போது அந்தப் பயனருக்கு எலான் மஸ்க், லோ கோவை மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதன்படியே தற் போது நீல குருவிக்குப் பதிலாக லோகோவான நாய் படத்தை மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த நட வடிக்கையால் ‘Dogecoin’ எனப் படும் க்ரிப்டோகரென்சி நிறுவ னத்தின் பங்குகள் 20 வீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நாய் ஜப்பான் நாட்டின்
ஷிபு வகை நாயாகும். இது பிரபல Dogecoin கிரிப்டோகரன் ஸியின் லோகோவாகும். இந்த
லோகோ அந்த நிறுவனத்தால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பிட்கொயின் உள்ளிட்ட பிற கிரிப்டோகரன்ஸிகளைப் பகடி செய்வதற்காக இந்த லோகோ உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் எலான் மஸ்க் ருவிற்றரில் ஒரு மீமையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு காரில் ஷிபா வகை நாய் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி அதனிடம் லைசன்ஸை பரிசோதிக்கிறார்.
அதில் நீலக் குருவி படம் இருக்க நாய் அது பழைய படம் என்று விளக்குவது போல் உள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உலக செய்திகள்

கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

July 21, 2026
23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!
உலக செய்திகள்

23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!

July 20, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

July 19, 2026
பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு
உலக செய்திகள்

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

July 18, 2026
ஈரான் மீது ஏழாவது இரவாக அமெரிக்க தாக்குதல்; பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

ஈரான் மீது ஏழாவது இரவாக அமெரிக்க தாக்குதல்; பதற்றம் தீவிரம்!

July 18, 2026
Next Post
தட்டுப்பாடு ஏற்படலாம்;பெற்றோல் தொடர்பில் எச்சரிக்கை!

தட்டுப்பாடு ஏற்படலாம்;பெற்றோல் தொடர்பில் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.