இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மலையகத்திற்கான 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது.
பெருந்தோட்ட பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களுடன் இரண்டு தனி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்திய வீட்டுத் திட்டத்திற்கு அப்பால், இலங்கையின் 25 மாவட்டங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்களின் கீழ் 2400 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.