Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் வழக்கு

கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் வழக்கு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் இன்று (03) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டில் பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்தமைக்கு எதிராக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைத்த போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஸ்ட ஆராய்ச்சி அதிகாரி லியோனல் குருகே ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன.

இதன்போது பதிலளிப்பவர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கின் அடிப்படையாக அமைந்த தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பித்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மேலும், சர்ச்சைக்குரிய இந்த கொள்முதல் குறித்து கணக்காய்வாளர் நாயகமும் விசாரணை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக அடுத்த வாரம் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, பிரதம நீதியரசரால் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு ஒன்றை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பிற கொள்முதல்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவாலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த மருந்து கொள்முதல் தொடர்பான ஆவணங்களை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து பெற்று, விசாரணைகளை நடத்த ஆறு மாத கால அவகாசம் வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘சான் சுத்தா’ இன்று காலை தப்பியோட்டம்

அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘சான் சுத்தா’ இன்று காலை தப்பியோட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.