கைது செய்யப்பட்ட கல்முனை சிறுவர் தடுப்பு நிலையத்தின் கண்காணிப்பாளர் நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை – உப்புவெளி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதான பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்முனை – இஸ்லாமாபாத் பிரதேசத்தில் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என அம்பாறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதுடன் சந்தேக நபர் குழந்தையை துடைப்பத்தால் அடித்தமை மேலதிக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.