Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அதிரடி நடவடிக்கை; மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!

மட்டக்களப்பில் அதிரடி நடவடிக்கை; மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!

19 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் நோக்கில் விசேட நடமாடும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கை இன்று (11) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகமும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்த விசேட திட்டம் செயல்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மட்டக்களப்பு நகரின் முக்கிய சந்திகளில் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, வீதிகளில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சாரதிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்காக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் நடமாடும் மருத்துவப் பரிசோதனைப் பேருந்து மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகள், வேன் சாரதிகள், கனரக வாகன சாரதிகள், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகன சாரதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சாரதிகளிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு உடனடியாகப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், அவர்கள் மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதும் கண்டறியப்பட்டு வருகிறது.

வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் அறிமுகமாகிறது பயணிகள் ட்ரோன் சேவை; இன்று கொழும்பு துறைமுக நகரில் முதலாவது சோதனை ஓட்டம்!
செய்திகள்

இலங்கையில் அறிமுகமாகிறது பயணிகள் ட்ரோன் சேவை; இன்று கொழும்பு துறைமுக நகரில் முதலாவது சோதனை ஓட்டம்!

November 11, 2026
ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!
செய்திகள்

ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!

November 11, 2026
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!
செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!

November 11, 2026
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; WTI, Brent விலைகளில் அதிகரிப்பு!
உலக செய்திகள்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; WTI, Brent விலைகளில் அதிகரிப்பு!

November 11, 2026
கித்துல்கலையில் முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து; இருவர் காயம்!
செய்திகள்

கித்துல்கலையில் முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து; இருவர் காயம்!

November 11, 2026
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!
செய்திகள்

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!

November 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு