Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் நடைபெறும் BIMSTEC உறுப்பு நாடுகளின் முதலாவது சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (11) முற்பகல் ஆரம்பமான இந்த மாநாட்டின் தலைமைத்துவப் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், பிராந்திய சுகாதார ஒத்துழைப்பில் நாட்டுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில், பிராந்திய பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், சுகாதார அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் மருத்துவத் தொழில்நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றன.

மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், பிராந்திய சுகாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை வழிநடத்துவதுடன், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

இதேவேளை, கடந்த 2025 ஒக்டோபர் மாதம் கொழும்பில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 78ஆவது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுக் கூட்டத் தொடரில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதன் பிராந்தியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், 2026 ஒக்டோபர் மாதம் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஐந்தாவது ஆசிய – பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் உப தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாகப் பல சர்வதேச மற்றும் பிராந்திய மாநாடுகளில் இலங்கைக்குத் தலைமைத்துவப் பொறுப்புகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

November 11, 2026
வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!
செய்திகள்

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

November 11, 2026
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

November 11, 2026
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!

November 11, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

November 11, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

November 11, 2026
Next Post
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு