Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்னர் முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அவை தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பொலிஸார் தொடர்ச்சியாக காலதாமதம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஐந்து இடங்களில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, நியாயமான விசாரணையை நடத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் 2025 ஒகஸ்ட் மாதம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். ஊர்காவற்துறை, அராலி சந்தி, மண்கும்பான், பிள்ளையார் கோவிலடி, அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு ஆகிய ஐந்து இடங்களிலேயே இந்த அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டிருந்தது.

புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு அருகில் அக்காலத்தில் இருந்த இராணுவ முகாம்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாக, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

வழக்கு 2026 நவம்பர் 10ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு அருகில் 36 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ முகாம் இருந்ததா, அந்த முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவது கடினமானதாக இருந்தாலும், அது தொடர்பில் முயற்சி செய்ய முடியும் என மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றத்துக்கு அறிவித்ததாக, வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் சுவாமிநாதன் பிறகலாதன் குறிப்பிட்டுள்ளார்.

“மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் CI எனப்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். 36 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தில் இராணுவ முகாம் இருந்ததா, அதற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் யார் என்ற விபரங்களை இராணுவத்திடமிருந்து பெற்று, அதனுடன் தொடர்புடையவர்களுக்கு அறிவித்து அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார். 36 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதும் தெரியாது. இருந்தாலும், அதற்கான முயற்சியை மேற்கொண்டு பார்ப்பதாகவும், இல்லையெனில் நீதிமன்ற உத்தரவின் கீழ் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.”

இந்த மனிதப் புதைகுழிகள் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியாக காலதாமதம் செய்து வருவதற்கு, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கை 2027 ஜனவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதவான் அனீபா ரஜீவ் உத்தரவிட்டதாகவும் சுவாமிநாதன் பிரகலாதன் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

“எங்கள் சார்பில் பெலினா அவர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் பூரணி மரியநாயகமும் கலந்துகொண்டனர். இராணுவத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி காலத்தை வீணடிக்காமல், விரைவாக விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய, ஜனவரி மாதம் 5ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.”

இந்த வழக்கு 2026 செப்டெம்பர் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவித்து பொலிஸார் நீதிமன்றத்திடம் மேலும் கால அவகாசம் கோரியிருந்தனர்.

யாழ்ப்பாணம் மண்டைதீவு தோட்டக் காணியில் உள்ள கிணறு ஒன்றில் மாத்திரம் சுமார் 60 மனித உடல்கள் இருக்கலாம் என வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் 2025 ஒகஸ்ட் 20ஆம் திகதி வெளிப்படுத்தியிருந்தார். அந்தக் கிணற்றில் உடல்கள் போடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர் ஒருவர் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவர் அன்றைய தினம் மேலும் தெரிவித்திருந்தார்.

36 ஆண்டுகளுக்கு முன்னர் அரச படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் நினைவுகூர்ந்த பிரதேச சபை உறுப்பினர், அன்றைய தினம் இராணுவத்தினரால் தமது பொறுப்பில் எடுக்கப்பட்டவர்களில் 84 பேருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை என வலியுறுத்தியிருந்தார். இராணுவத்தினரால் பொறுப்பில் எடுக்கப்பட்டவர்களில் சிலர் கொலை செய்யப்பட்டு கிணறுகளில் போடப்பட்டதாகவும் சுவாமிநாதன் பிரகலாதன் அப்போது தெரிவித்திருந்தார்.

இலங்கையில் இதுவரை 17 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக, நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கடந்த ஆண்டு முதன்முறையாகத் தெரிவித்திருந்தார். எனினும், இலங்கை முழுவதும் பெருமளவிலான மனிதப் புதைகுழிகள் பரவிக் காணப்படுவதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!
செய்திகள்

BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

November 11, 2026
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!

November 11, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

November 11, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

November 11, 2026
மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!
செய்திகள்

மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!

November 11, 2026
இலங்கையில் அறிமுகமாகிறது பயணிகள் ட்ரோன் சேவை; இன்று கொழும்பு துறைமுக நகரில் முதலாவது சோதனை ஓட்டம்!
செய்திகள்

இலங்கையில் அறிமுகமாகிறது பயணிகள் ட்ரோன் சேவை; இன்று கொழும்பு துறைமுக நகரில் முதலாவது சோதனை ஓட்டம்!

November 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.