Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கொலை வழக்கொன்றிற்காக புதிய தொழில்நுட்பமொன்று அறிமுகம்!

இலங்கை கொலை வழக்கொன்றிற்காக புதிய தொழில்நுட்பமொன்று அறிமுகம்!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

பொலநறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகோரள மற்றும் அவரின் மெய்ப்பாதுகாவலர் கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முதன்முறையாக முகத்தை அடையாளப்படுத்தும் தொழில் நுட்பத்தை நாட்டின் நீதி அமைப்பில் பயன்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவவில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ஆட்சியாளர்கள் மீதான மக்களின் கோபம் அதிகரித்ததையடுத்து ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் போது, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் குண்டர்கள், காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், “அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் பங்கேற்று விட்டு பொலநறுவைக்கு திரும்பிக்கொண்டிருந்த அமரகீர்த்தி அத்துக்கோரள எம். பி. பயணித்த வாகனம். நிட்டம்புவ நகரில் கோபமடைந்த பொதுமக்களிடம் சிக்கியதில், இந்த படுகொலை நிகழ்ந்தது.

அதன் அடிப்படையில் இந்த கொலைகள் தொடர்பாக மூவரடங்கிய உயர் நீதி மன்ற ட்ரயல் அட் பார் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளை அடையாளம் காண முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை கம்பஹா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பிரசன்ன பண்டார, வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன் மூலம், சம்பவத்தின் சி. சி. ரீ. வி. காட்சிகளை ஆய்வு செய்யவும்,அந்தக் காட்சிகளில் காணப்பட்டவர்களின் முகங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒத்துப்போகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உண்மையில் குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பதை அடையாளம் காணவும் முடியும் என்றும் அவர் கூறினார்.

குற்றத்திற்கு காரணமானவர்களை சாதகமாக கண்டறிந்து அவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்றார்.குற்றம் சாட்டப்பட்ட 41 பேர் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் இறந்துவிட்டனர். மேலும் இருவர் முன்னிலையாகத நிலையில் விசாரிக்கப்படுகிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பது தெரிந்ததே, மற்றையவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இருவர் சார்பிலும் சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.

அதேசமயம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஹான் மாபா பண்டார (தலைவர்), ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவன் பத்திரன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (01.12.2023) குற்றப்பத்திரிகைகள் வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும், தாம் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!
செய்திகள்

எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!

June 9, 2026
Next Post
இலங்கையை சேர்ந்த நிர்மாணத்துறை பணியாளர்களுக்கு ஜப்பானில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!

இலங்கையை சேர்ந்த நிர்மாணத்துறை பணியாளர்களுக்கு ஜப்பானில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.