குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவினை பெற தகுதியுடை 14 இலட்சத்து 6,932 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இதன்படி, 8,775 மில்லியன் ரூபா கொடுப்பனவு வங்கிகளில் வைப்பலிடப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவுகள், நாளை (05) முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு எதிர்காலத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.