Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர்கள் கொல்லப்பட்டபோது மௌனம் காத்த முஸ்லீம் தலைவர்கள் இன்று பலஸ்தீன் மக்களுக்காக குரல் எழுப்புகின்றனர்; சபா.குகதாஸ் ஆதங்கம்!

தமிழர்கள் கொல்லப்பட்டபோது மௌனம் காத்த முஸ்லீம் தலைவர்கள் இன்று பலஸ்தீன் மக்களுக்காக குரல் எழுப்புகின்றனர்; சபா.குகதாஸ் ஆதங்கம்!

3 years ago
in செய்திகள்

வடக்கில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது கண்டும் காணாதவர்கள் போல இருந்த முஸ்லிம் தலைவர்கள் இன்று பலஸ்தீன்மக்களை காப்பாற்றுமாறு பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம் காரணம் அப்பாவிப் பொது மக்கள் அழிக்கப்படுகின்றனர் இதனை உலகின் பல தரப்பட்ட பிரிவினரும் அமைப்புக்களும் கண்டித்துள்ளனர்.

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைப் பாராளுமன்றத்தில் முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர் அதனை நாமும் வரவேற்கின்றோம்.

ஆனால் 2009 ஆண்டுக்கு முன் ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த இதே முஸ்லிம் தலைவர்கள் வடக்கில் வன்னி மாவட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவி சகோதர ஒரே மொழி பேசும் தமிழர்கள் கொல்லப்படும் போது கண்டும் காணாதவர்கள் போல இருந்தது மாத்திரமல்ல போரை நடாத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதை நினைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனவேதனை அடைந்தனர்.

இன்று இஸ்ரேல் காசாவில் குண்டு போட்டு குழந்தைகள் பெரியவர்கள் என அப்பாவி மக்களை அழிப்பது போன்று தான் அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை இஸ்ரேல் விமானங்களும் விமானிகளும் ராஜபக்சாக்களின் ஏவலில் செஞ்சோலை மாணவிகள் , வைத்தியசாலைகள், தற்காலிக மக்களின் முகாம்கள் , சிறுவர் இல்லங்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் போன்றோரை அழிக்கும் போது அன்று இதே பாராளுமன்றத்துக்குள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைச்சரவையில் ஆதரவு வழங்கியதை பாதிக்கப்பட்ட சகோதர தமிழ் மக்கள் இலகுவில் மறக்கமுடியாது மனம் குமுறுகின்றனர் .

இன்று தொலைவில் உள்ள நாடுகளிடம் பலஸ்தீ்ன மக்களை காப்பாற்றுமாறு நீங்கள் கோருவதை எவ்வளவு தூரம் செவி சாய்ப்பார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும் அன்று உங்கள் ஆதரவுடன் இருந்த ராஐபக்ச அரசாங்கத்தின் கபினட் அமைச்சர்களாக இருந்த உங்களால் மிக இலகுவாக கொல்லப்பட்ட அனைவரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் இன்று காசா மீது காட்டும் மனிதாபிமானத்தை ஈழத் தமிழர்களுக்கும் காட்டியதாக வரலாறு பதிவு செய்திருக்கும். இவ்வாறான பாரபட்சமான நிலைப்பாட்டை வரலாறு இலகுவில் மன்னிப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
Next Post
பில்கேட்ஸ் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையே முக்கிய சந்திப்பு!

பில்கேட்ஸ் - ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையே முக்கிய சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.