மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு ‘எதிர் காலத்தில் மனித உரிமைகள் கலாச்சாரத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் நிலை நிறுத்தல்’ என்ற கருப்பொருளில் மனித உரிமைகள் தின வாரம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அகம் (AHRC) மனிதாபிமான வள நிலையத்தினால் நேற்று (04.12.2023) தொடக்கம் எதிர்வரும் 12.12.2023 வரை பல்வேறு பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் பிரதேசங்கள் தோறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஆரம்ப நிகழ்வானது மட்டக்களப்பு வந்தாறு மூலை மத்திய மகாவித்தியாலயம் மற்றும் முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ணா வித்தியாலய முன்றலில் இது தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வானது மேற்படி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து கருத்து சுதந்திரம் தொடர்பான வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.இதன்போது மாணவர் மத்தியில் காணப்படும் பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் வீதி நாடகம் மூலம் நடித்து காட்டப்பட்டது.பிரதேசதங்கள் தோறும் மனித உரிமைகள் தினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி எதிர்காலத்தில் சிவில் அமைப்புக்கள் சுயமாக மனித உரிமை தினத்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.