மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை மேலும் 12 போ் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த இரு நாட்களில் கனமழையால் 19 போ் உயிரிழந்துள்ளனா்.
மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. இந்த கன மழைக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் உயிரிழந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்தது.
அதன்படி செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மழை வெள்ளத்துக்கு 12 போ் உயிரிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனா். ஏற்கெனவே திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் இறந்தனா். இதனால் மிக்ஜாம் புயலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 19 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களையும் சோ்த்து சென்னையில் மழைக்கு கடந்த 10 நாட்களில் 22 போ் இறந்துள்ளனா்.
அத்தோடு முத்தியால்பேட்டையில் ஒரு குடியிருப்பைச் சோ்ந்த 54 குடும்பங்களை பொலிஸாா் மீட்டனா். மேற்கு மாம்பலத்தில் 2 முதியவா்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 6 போ் மீட்கப்பட்டனா். மடிப்பாக்கம், மெரினா, கோட்டூா்புரம், ஈச்சங்காடு, துரைப்பாக்கம், ஆா்.கே.நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் பொலிஸாா் மீட்பு பணிகளில் ஈடுபட்டனா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பெத்தேல் நகரிலிருந்து 60 போ் மீட்கப்பட்டு, அப் பகுதி பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனா்.
இவ்வாறு மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக சென்னை பொலிஸ் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.