Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

46 minutes ago
in செய்திகள்

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முரசு’ புயல் தற்போது இந்திய நிலப்பரப்புக்குள் நுழைந்துள்ளதுடன், அது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்குத் திசையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின்படி, இன்று முற்பகல் 11.30 மணியளவில் சாதாரண புயலாகவும், இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவிழக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

அத்துடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என்பதால் குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆழ்கடலில் பயணிக்கும் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள், மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ‘முரசு’ புயல் தொடர்பாக வெளியிடப்பட்ட இறுதி எச்சரிக்கை அறிவித்தல் இதுவெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை
செய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை

November 3, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

November 3, 2026
அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது
உலக செய்திகள்

அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது

November 3, 2026
பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்

November 3, 2026
கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !
செய்திகள்

கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !

November 3, 2026
ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!
உலக செய்திகள்

ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!

November 3, 2026
Next Post
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு