கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்க்கு அருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ருவன் குமார (54) என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவா கருத்து தெரிவிக்கையில்.
நேற்று முன்தினம் (05) காலை 5 மணியளவில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட பரிமாற்று நிலையத்திற்கு வந்த போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளதாகவும்,இது ஒரு தற்கொலை எனவும் தெரிவித்தார்.