பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரம் தொடர்பான சர்வதேச தின நிகழ்வுகள் கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வுகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட அருவிப் பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி திருமதி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்றது.
அருவிப் பெண்கள் வலையமைப்பினால் உருவாக்கப்பட்ட பிரதேச மட்டக் குழுக்கள், சிறு குழுக்கள் இளைஞர் குழுக்கள் மற்றும் மாவட்ட குழுக்கள் என்பன இணைந்து அவர்களின் பங்குபற்றுதலுடன் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். மாவட்டத்தின் 09 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உருவாக்கப்பட்ட பிரதேச மட்டக் குழுக்களிடையே ஒற்றுமையை பிரதிபலிக்கும் முகமாக தீப்பந்தம் ஏற்றப்பட்டு ஒவ்வொரு குழு அங்கத்தவர்களிடையே கைமாறப்பட்டு அதிதிகளின் பங்கு பற்றுதலுடன் பொதுதீபம் ஏற்றப்பட்டது. சுயதொழில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு மரபு ரீதியாக பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை நடவடிக்கைகள் நடைபெற்றன.பெற்றோர்களை இழந்த நிலையில் கல்வி கற்று பல்கலைக் கழகம் செல்லும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சாதணைப் பெண்கள், கௌரவ அதிதிகள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன.பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல் திட்ட நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை 16 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன், செங்கலடி பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம்இகிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவுஇ பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி, கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் வி.வசந்தா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.