Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களின் அரசியலை புலம்பெயர் தனி நபர்கள் கைளாய முனைவது கவலைக்குரியது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு!

தமிழ் மக்களின் அரசியலை புலம்பெயர் தனி நபர்கள் கைளாய முனைவது கவலைக்குரியது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

தனி நபர்கள் தமக்குள் பொறுப்பற்ற பிரகடனங்களை உருவாக்கி அவற்றை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்மொழிய முற்படுவது கண்டனத்திற்குரியது. உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்ப சேர்ந்த ஒரு சிலர் பௌத்தப பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப் படுத்து முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடாது அவர்களது அனுமதியை பெறாமல், தன்னிச்சையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது வேதனைக்குரியது. புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை காட்டிக் கொண்டு எமது ஒட்டுமொத்த அரசியல் அபிலாசைகளையும் தவறாக வழி நடத்திச் செல்லும் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த நடவடிக்கையானது அவர்களது சொந்த நலன்களை பூர்த்தி செய்வதற்கு தமிழ் மக்களின் அரசியலை பலிக்கடாவாக்கும் செயற்பாடா என்று சந்தேகம் கொள்ள வேண்டி உள்ளது.

ஈழத் தமிழர்களால் தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக நமது தேசத்தில் அயராத முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் அமைப்புகள் ஆதரவாக செயற்பட வேண்டுமே தவிர அவற்றை மலினப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் நேரடியாக ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.

அவர்கள் முன் வைத்திருக்கும் பிரகடனத்திலே மாகாணங்களுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பது வேடிக்கையானது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கையே புரிந்து கொள்ளாதவர்கள் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

தமிழ் மக்களின் இறுதி அரசியல் தீர்வு என்பது சமஷ்டி முறையான ஆட்சியமைப்பாகவே இருக்க முடியும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறாத கொள்கையோடு தொடர்ந்தும் பயணித்து வருகிறது . அந்த அரசியல் தீர்வுக்கானபேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப் பட்டபோது, நல்லிணக்க நடவடிக்கையாக ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரங்களை பகிர்ந்து தேர்தல்களை நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளாம்.

அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைளும் நடந்தன. இந்த நேரத்திலே புதிய அரசியல் யாப்பு, மாகாண சபைக்கான அதிகாரங்களை பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கின்ற கோரிக்கை அபத்தமானதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை குழி தோண்டி புதைக்கும் ஆபத்தான நடவடிக்கையும் ஆகும்.

ஒருசிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் ஈடுபட வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைப்பதோடு, நமது கண்டனத்தையும் பதிவு செய்து கொள்கிறோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
நாளை வங்கி கணக்குகளுக்கு வரவுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.