கர்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு விநியோகத் திட்டம் கிரான் கோறளை தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுவின் ஆலோசனையின் பேரில் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய பல நோக்கு கூட்டுறவு சங்க நிர்வாகம் இவ் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் அ.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எம்.விஜேந்திரராஜா,அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் பார்த்தீபன் மற்றும் பொது முகாமையாளர் சி.சிவசுதன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.இதன்போது கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் கர்பிணிப் பெண்கள் இவ் அரச உதவியினை பெறும் நன்மை கிடைத்துள்ளது. மாதாந்தம் 4500 ரூபா பெறுமதியான 9 வகையான ஒரு வருடத்திற்குரிய போசாக்கான உணவுப் பொருட்க்கள் வழங்கப்படவுள்ளதாக பலநோக்கு கூட்டுறவு சங்கத்தலைவர் தெரிவித்தார். இன்று உணவுப் பொருட்களை பெற்றுச் செல்வதில் பயணாளிகள் ஆர்வம் செலுத்தினர்.