2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்) ஒரு மீனவருக்கு ஐந்து ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (11) தெரிவித்தார்.
ஆனால், நான்கு முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செலவின தலைப்புகள் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வற் வரி விதிக்கப்பட்டதன் பின்னர் டீசல் 63 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவித்த அவர், இந்த நிலையில் மீனவர்கள் எவ்வாறு கடலுக்கு செல்வார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.