2023 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 11 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறவிடப்படும் சுங்கத் தீர்வைகள், அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள் யாவும் தாம் வழங்கப்பட்டுள்ள அட்டவணையில் தெரிவித்துள்ள செலாவணி வீதங்களின் அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் என சுங்கப் பணிப்பாளர் நாயகம் பீ.பி.எஸ்.சி நோனிஸ் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அட்டவணை