Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம்; மட்டக்களப்பில் மூன்று நாள் செயலமர்வு!

அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம்; மட்டக்களப்பில் மூன்று நாள் செயலமர்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் “இனவிருத்தி சுகாதாரம்” எனும் தலைப்பில் மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மூன்று நாள் செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மட்டக்களப்பு கிறீன் காடின் விடுதியில் அதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த மூன்று நாள் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.எ.சீ.எம். றியாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் அதன் அனர்த்தத்திற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய சமுகத்தைக் கட்டியெழுப்புதல், கிராம மட்டங்களில் இயற்கை அனர்த்த தயார்படுத்தல், அனர்த்தக் குறைப்பு, அவசரகால நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் மற்றும் அனர்த்தத்தின் போதான இனவிருத்தி சுகாதாரம் போன்ற விடயங்களை மையப்படுத்தியவாறு இடம்பெறவுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இச்செயலமர்வில் பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் என பலரும் அழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகின்றனர்.

குறித்த செயலமர்வின் ஆரம்ப நாள் நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், எஃப்பீஏ (FPA) நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் கமகே மற்றும் எஃப்பீஏ (FPA) நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் அனர்த்த முகாமைத்துவ சட்டம், அவசர கால நிலைமையில் எவ்வாறு செயற்படுதல், முதலுதவி, நீச்சல் பயிற்சி மற்றும் அனர்த்தங்களை தடுத்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை தேர்ந்தெடுத்து செயல்முறை பயிற்சிகளையும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
கைகளை பயன்படுத்தாமல் கின்னஸ் சாதனை படைத்த கனேடிய இளைஞன்!

கைகளை பயன்படுத்தாமல் கின்னஸ் சாதனை படைத்த கனேடிய இளைஞன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு