Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இத்தாலியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து!

இத்தாலியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 17 பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலி நாட்டின் போலோக்னா நகரில் இருந்து ரிமினி என்ற இடத்துக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. அங்குள்ள பென்சா-போர்லி பகுதிகளுக்கு இடையே சென்றபோது அதே தண்டவாளத்தில் மற்றொரு ரெயிலும் வந்து கொண்டிருந்தது.

இதனையறிந்த டிரைவர்கள் உடனடியாக ரெயிலை நிறுத்த முயன்றனர். எனினும் இரு ரெயிலும் நேருக்கு நேர் மோதியது. இதில் சில ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.

அப்போது ரெயிலுக்குள் இருந்தவர்கள் முன்னும் பின்னுமாக விழுந்தனர். இதில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயிலுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக சில மணி நேரம் ரெயில்கள் இயக்கப்படவில்லை.

இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் தொடர்பில் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இத்தாலி போக்குவரத்து துறை மந்திரி மேட்டியோ சல்வினி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
Next Post
காணாமல் போன இந்த கிளியை கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு சன்மானம்!

காணாமல் போன இந்த கிளியை கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு சன்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு