Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எரிபொருள் மானியத்தை அறிமுகப்படுத்துவதா அல்லது எரிபொருள் விலையை மாற்றியமைப்பதா என்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி. ஜே.ராஜகருணா தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், சந்தைக்கு விநியோகிக்கும் எரிபொருள் அளவை மற்ற எரிபொருள் நிறுவனங்கள் குறைத்ததே இந்தத் தட்டுப்பாட்டிற்கான காரணங்களில் ஒன்று என்று கூறினார்.

நிலைமை குறித்து விவாதிக்க, கடந்த வாரம் அனைத்து எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர்.

அந்தக் கூட்டத்தின்போது, ​​எரிபொருள் விற்பனையில் தாங்கள் தற்போது சந்தித்து வரும் இழப்புகள் குறித்து அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முறையிட்டன.

அந்த முறைப்பாடுகளுக்கு அமைவாக, RM Parks (Pvt) Ltd நிறுவனம் ஒரு லிட்டர் டீசலுக்கு 173 ரூபாயும், ஒரு லிட்டர் பெற்றோலுக்கு 38.75 ரூபாயும் இழப்பைச் சந்திக்கிறது. 

Sinopec நிறுவனம் ஒரு லிட்டர் டீசலுக்கு 192 ரூபாயும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 67 ரூபா இழப்பையும் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டன.

இதற்கிடையில், ஒரு லிட்டர் டீசலுக்கு 136 ரூபாவும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 57 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக லங்கா ஐஓசி (Lanka IOC) தெரிவித்துள்ளது.

எரிபொருள் இருப்பை உறுதி செய்வதில் அரசுக்குத் தேசியப் பொறுப்பு உள்ளபோதிலும், ஏனைய நிறுவனங்கள் வணிக ரீதியாகவே செயல்படுவதால், தொடர்ந்து நஷ்டத்தில் எரிபொருளை விற்பனை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட விலைகளில் எரிபொருளை விற்பனை செய்யும்போது ஏற்படும் இழப்புகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், அந்நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சூழலில், இழப்பைத் தவிர்க்கும் வகையிலான விலைகளில் எரிபொருளை விற்பனை செய்ய அந்நிறுவனங்களை அனுமதிப்பது அல்லது மானியம் வழங்குவதன் மூலம் அரசாங்கம் இதில் தலையிடுவது ஆகியன குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
Next Post
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு