Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

டஜன் கணக்கான நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை விதித்ததன் மூலம் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, அமெரிக்காவின் 25 மாநிலங்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக திங்கள்கிழமை (03) வழக்குத் தொடர்ந்துள்ளன.

நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குறித்த சுங்க வரிகளை உடனடியாக நிறுத்தவும், அவை சட்டவிரோதமானவை என அறிவிக்கவும், வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிடவும் நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இலங்கை உள்ளிட்ட சுமார் 60 வர்த்தகப் பங்காளி நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரை புதிய சுங்க வரிகளை ட்ரம்ப் நிர்வாகம் விதித்தது. அந்தத் தீர்மானத்தையே இந்த சட்டரீதியான சவால் குறிவைத்துள்ளது.

1974ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 301ஆம் பிரிவின் கீழ், “கட்டாய உழைப்பு” தொடர்பான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த வரிகள் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து, உலகின் பல நாடுகளுக்கு எதிராக பரவலான சுங்க வரிகளை ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தி வந்துள்ளது. அமெரிக்கா சர்வதேச வர்த்தகத்தில் பாதிக்கப்படுவதாக வாதிடும் ட்ரம்ப், புதிய வர்த்தக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான பேரம்பேசும் கருவியாக சுங்க வரிகளை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!
செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!

November 4, 2026
நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!

November 4, 2026
மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!
செய்திகள்

மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!

November 4, 2026
பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!
செய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!

November 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

November 4, 2026
Next Post
சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு