Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (03) பெய்த பலத்த மழையால் பொல்பிட்டிய மொரஹேனேகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், நாவலப்பிட்டி சோலங்கந்த பகுதியில் கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியின் 2ஆம் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதி தற்காலிகமாக மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஞானானந்தகம பகுதியில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த 53 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும், கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீதியைக் கடக்க முயன்ற 45 வயதுடைய நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

September 18, 2026
“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”
அரசியல்

“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”

September 18, 2026
இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!
செய்திகள்

இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

September 18, 2026
Next Post
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு