இலங்கை கிரிக்கெட்டின் (SLC) ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது இந்த நியமனம் நேற்று 14 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், இது தொடர்பான அறிவித்தலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகள் தோல்விகளை சந்தித்ததன் விளைவாக கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சமீபத்தில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டனர்.
ஆசியக் கோப்பையிலும், 2023 உலகக் கோப்பையிலும் தேசிய அணி தோல்விகளைச் சந்தித்ததன் விளைவாக இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது.
இந்நிலையில் சனத் ஜயசூரியவின் நியமனம், இலங்கை கிரிக்கெட் அணியை சரியான பாதையில் வழிநடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.