Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வான்கதவுகள் திறப்பு; மட்டக்களப்பில் வீதிகளில் பாயும் வெள்ள நீர்!

வான்கதவுகள் திறப்பு; மட்டக்களப்பில் வீதிகளில் பாயும் வெள்ள நீர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தற்போது வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதோடு, பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதியில் இரண்டு இடங்களை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்துள்ளது. இதனால் அவ்வீதியை பயன்படுத்தும் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களில் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30 அடி 9 அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 6 அங்குலமும், அக்குளத்தில் 10 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.

வாகனேரி குளத்தின் நீர்மட்டம் 16 அடி 11 அங்குலமும், கட்டுமுறிவு குளத்தின் நீர்மட்டம் 6 அடியும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16 அடி 5 அங்குலமும், அக்குளத்தில் 12 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.

வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13 அடி 6 அங்குலம் அக்குளத்தில் 12 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.

புணானை அணைக்கட்டு 4 அடி 7 அங்குலமும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 16 அடி 2அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30 அடி 2 அங்குலமும் அதிகரித்துள்ள நிலையில், அக்குளத்தின் 2 வான்கதவுகள் 2.5 உயரத்தில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைப் பகுதியில் 41 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 85.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 69.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 35 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 33 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 46 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான பிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள் குடியிருப்புக்களிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும், இதனால் பல தொற்று நோய்களுக்கு தாம் முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு