மட்டக்களப்பு Leo கழகத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் (Drink Bottles) வழங்கும் செயற்திட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு Leo கழகத்தினரால் கடந்த 15.12.2023 வெள்ளிக்கிழமை கிரான் அக்குரான பாரதி வித்தியாலய மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கும் செயற்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி செயற்திட்டமானது அப்பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் காணப்படும் நீர் பற்றாக்குறையை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டது. நாளுக்கு ஒரு முறையே நீர் இப்பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் நிலையில் மாணவர்களுக்காக மட்டு லியோ கழகம் இச் செயற்திட்டத்தை முன்னெடுத்தது.
இச்செயற்திட்டத்தின் போது மாணவர்களது நீர்த்தேவையானது பூர்த்தி செய்யப்பட்டதுடன் மாணவர்கள் நீரை சேமித்து வைப்பதற்கும் ,அதே நேரத்தில் பாடசாலை நேரத்தில் அருந்துவதற்கும் உதவியாக இந்த நீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கிறிஸ்மஸ் தாத்தா சில உணவுப் பண்டங்களை வழங்கியதன் மூலம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நெகிழ்வான தருணமாகவும் இது அமைந்தது.
இச்செயற்திட்டமானது Project Chairman Leo நவநீதன் மற்றும் அவருடன் இணைந்த குழுவினரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்திற்கான நிதியினை Lion Vijitha Nobert ஒழுங்குபடுத்தியுள்ளார். மேற்குறித்த பிரதேசத்திற்கு , சென்ற கழக அகங்கத்தவர்களுக்கு போக்குவரத்து வசதியும் ,மதிய உணவு வசதியினை Lion singing Fish, Batticaloa கழகத்தை சேர்ந்த Lion Mano ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவர்களுக்கு மட்டு லியோ கழகத்தினர் நன்றிகளை தெரிவித்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.