காலிமுகத்திடலுக்கு அர கலய போராட்டம் என 200 இளைஞர் யுவதிகள் முதற்கட்டமாக வருகைதந்து முகாமிட்டபோது அவர்களை. அடித்து விரட்டுமாறு நான் கோரியபோதும் கோட்டாபய ராஜபக்ஷ அதனைச் செய்ய வில்லை என்று பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. தீஸாநாயக்க தெரிவித்தார்.
வெலிமடவில் சனிக்கி ழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது காலி முகத்திடலில் தொடர்ச்சியாக இருந்துபோராடப்போவதாக கூறியவாறு 200 இளைஞர் யுவதிகள் வந்து முகாமிட்டனர். அப்போது நான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தேன். அவரிடம். காலிமுகத் திடலை மலசலகூடமாக்க இடமளிக்கவேண்டாம். தற்போது வந்திப்பவர்களை பொலிஸாரையோ அல்லது இராணுவத்தினரையோ பயன்படுத்தி அடித்து விரட்டுங்கள் என்று கூறினேன். அவர் எனது யோசனையை உடனடியாக எதிர்க் கவில்லை. புன்னகையுடன் இருந்தார். இருப்பினும் நான் கூறியதை அவர் செய் யுவில்லை. செய்திருந்தால் அவர் இன்னும் ஜனாதிபதி யாக இருந்திருப்பார்-என்றார்.