நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அந்த வழக்கில், நீதிமன்றங்கள் அபராதமாக இருபத்தி ஆறு கோடியே எழுபத்தாறு இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று நாற்பத்து எட்டு ரூபாயை வசூலித்துள்ளன.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக உரிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திருவிழாக் காலத்தை இலக்காகக் கொண்ட சிறப்புத் திட்டத்தின் கீழ் 1,185 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.