சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின், ஜனவரி முதலாம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து விசேட மருத்துவர்கள் உட்பட ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
அத்துடன், மேலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.