Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இமயமலை பிரகடனம் தொடர்பில் எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

இமயமலை பிரகடனம் தொடர்பில் எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

3 years ago
in செய்திகள்

இமயமலை பிரகடனம் பயங்கரமானது என விமர்சித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது. இதனால் இலங்கையை பிரிக்க முடியாமல்போனது. ஆனால் சூடானை பிரித்தனர். இலங்கையை பிரித்திருந்தால், ஈழத்துக்கு அப்பாற்பட்ட பகுதியில்தான் தெற்காசியாவின் காசா பகுதி அமைந்திருக்கும்.

பாலஸ்தீன மக்களுக்கு இன்று நடப்பதுதான் சிங்கள மக்களுக்கு நடந்திருக்கும். இது தான் உண்மை கதை.
சமாதான முயற்சி ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து நோர்வே ஆராய்ந்தது. பேராசிரியர்களால் 140 பக்கங்களில் அறிக்கையொன்று வழங்கப்பட்டது. தோல்விக்கான காரணங்கள் அதில் விவரிக்கப்பட்டிருந்தன.

சமஷ்டி ஆதரவு போக்கில் இருந்த சந்திரிகா அம்மையாரின் ஆதரவை பெற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அப்போதைய பிரதமர் (ரணில்) தவறியமை முதல் காரணம். இலங்கையில் பிக்கு சமூகத்தின் ஆதரவை திறட்ட தவறியமை இரண்டாவது காரணமாகும். அதாவது பிக்குகளின் ஆதரவை திரட்ட உரிய வேலைத்திட்டமொன்று இல்லாமை.

வேலைத்திட்டமொன்று இருக்கவில்லை என முழுமையாக கூறவும் முடியாது. சில பிக்குகள் இருக்கவே செய்தனர்.தற்போதுகூட டயஸ் போராக்கள், சில பிக்குகளை பிடித்துக்கொண்டு இமயமலை
பிரகடனம் எனும் திட்டமொன்றை முன்னெடுக்கின்றனர்.

ரணில் கூறும் 13 இற்கு அப்பால் என்ற யோசனையை விடவும் பயங்கரமான திட்டத்துடன் மீண்டும் வந்துள்ளனர். ஜே.வி.பி மற்றும் ஹெலஉறுமயவின் ஆதரவு இருக்கவில்லை எனவும் காரணம் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று ஜே.வி.பியிடம் தேசியவாதம் இல்லை. ஊழல் எதிர்ப்பு பற்றி மாத்திரமே குரல் எழுப்புகின்றனர். சந்திரிக்காவும், ரணிலும் கூட நட்புடன் செயற்பட்டு வருகின்றனர்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
Next Post
காலாவதியான அழகுசாதன பொருட்கள் 100 ரூபாய்க்கு விற்பனை; நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை!

காலாவதியான அழகுசாதன பொருட்கள் 100 ரூபாய்க்கு விற்பனை; நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு