யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொருட்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விளக்கம் பெறுவதற்காக குறித்த அதிகாரி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








