14 வயது சிறுமியுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து, அவரை விகாரையில் நான்கு நாட்கள் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
16 வயதான பிக்குவுக்கும் 14 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுமியை விகாரைக்கு அழைத்து சென்ற பிக்கு அங்கு அவரை 4 நாட்கள் தடுத்து வைத்துள்ளார்.
தொடர்பில் சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிக்குவைபொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிக்கு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை, ஜனவரி 4ஆம்
திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல நீதிவான் உத்தரவிட்டார்.