பலாங்கொடை அங்குருவாதொட பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 41 வயதுடைய திருமணாாகாத ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
உயிரிழந்தவர் உட்பட மூவர் நேற்று (06) பிற்பகல் படகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மதுபான விருந்தொன்றை நடத்தியுள்ளனர்.
அதன்பின்னர், உயிரிழந்த நபர் தனது கையடக்க தொலைபேசியில் சந்தேகநபரின் கைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு அவதூரான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, முச்சக்கரவண்டியில் கூர்மையான ஆயுதத்துடன் மதுபான விருந்து நடைபெற்ற வீட்டிற்கு வந்த சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த சந்தேகநபர் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் உயிரிழந்தவரின் நெஞ்சுப் பகுதியில் குத்தியதில் அவர் நிலத்தில் விழுந்துள்ளார்.
இதன் பின்னர் பயந்துபோன சந்தேகநபர், தாக்குதலுக்குள்ளான நபரைத் தனது முச்சக்கரவண்டியிலேயே கல்பாத்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் அவரை ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளையில் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஹொரணை பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அங்குருவாதொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







