Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!

2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!

11 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) அறவிடப்படும் வருமான வரம்பை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒரு இலட்சம் ரூபாய் மாத வருமானம் பெறுவோருக்கும் உழைக்கும் போது செலுத்தும் வரி அறவிடப்பட்ட நிலையை மாற்றி, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் குறித்த வரி பொருந்தும் வகையில் நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த வருமான வரம்பை எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் அதிகரித்து, மக்களுக்கு கூடுதல் வரிச் சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளை நூறு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அத்துடன், பொது அரச சேவையாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களுக்கான சில கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஏற்கனவே பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், அத்தியாவசிய கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஏனைய சில கொடுப்பனவுகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், 2028ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்காது என்பதால், அந்த ஆண்டில் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!

November 7, 2026
காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!
செய்திகள்

காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!

November 7, 2026
கொக்கட்டிச்சோலை பன்சேனையில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!
செய்திகள்

கொக்கட்டிச்சோலை பன்சேனையில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!

November 7, 2026
வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!
செய்திகள்

வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!

November 7, 2026
23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!
செய்திகள்

23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

November 7, 2026
கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு