புதிய ஆண்டில் மக்களுக்கான விரிவான வேலை திட்டங்களை மக்கள் காலடிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நாட்டினுடைய ஜனாதிபதி பிரதமர் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மக்களினுடைய சுமைகளை குறைப்பதாக அமைய வேண்டும் அதைத்தான் நாங்களும் கூடுதலாக இறங்கி வேலை செய்கின்றோம் அதுதான் நோக்கம் அந்த அடிப்படையில் தான் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், மலர்ந்திருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை இலங்கை திருநாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் மட்டக்களப்பு மண்ணின் மக்களுக்கும் எங்களுடைய முற்போக்கு தமிழர் கழகம் சார்பாக தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த புதிய வருடம் 2024 எல்லோருக்கும் ஆரோக்கியமான ஒரு ஆண்டாக வளமான ஆண்டாக செழிப்பான ஆண்டாக அமைய வேண்டும் கடந்த வருடம் எங்களுடைய மக்கள் உண்மையிலேயே நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் சொல்ல முடியாத பல துயரங்களை அனுபவித்திருக்கின்றார்கள் கடந்த 2020 தொடக்கம் உங்களுக்கு தெரியும் கொவிட் தொற்று அதைத் தொடர்ந்து பொருளாதார பயிற்சி இவ்வாறு அடுத்தடுத்து அடி மேல் அடி போல் துன்பங்களை அனுபவித்து வந்தாலும் 2023 இருந்து நடுப்பகுதியில் இருந்து வீழ்ச்சிகண்ட நாடு படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகின்றது.
மலர்ந்திருக்கின்ற இந்த ஆண்டு நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் வாழ்க்கை சுமை குறைய வேண்டும் அதைத்தான் நாங்கள் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம். வாழ்க்கை சுமை குறைய வேண்டுமே ஏனென்றால் ஒருவருடைய நாளாந்த வருமானம் என்பது அவருடைய வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு போதுமானதாக இல்லை இவை அரச உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும் சாதாரண தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும்.
இன்று இந்த நாட்டிலே வாழ்க்கை சுமையை பெரிய அளவிலே சுமந்து கொள்பவர்கள் அரச உத்தியோகத்தர்களும் சாதாரண மக்களும் ஆகவே அந்த வாழ்க்கை சுமை குறைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய இந்த வருடத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்ற வகையில் அவர்கள் குடும்பத்தோடு மகிழ்வோடு வாழக்கூடிய வகையிலே பொருள் விலைவாசிகள் இன்னமும் குறைக்கப்பட வேண்டும் அவ்வாறான சூழல் உருவாக்கப்படுகின்ற போது தான் மக்கள் மத்தியில் நாங்கள் ஒரு மகிழ்ச்சியை காண முடியும் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த புதிய ஆண்டில் 2023ல் எமது முற்போக்கு தமிழர் கழகம் கடந்த 2020 முதல் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு இந்த மண்ணிற்கு ஆற்றி வந்துள்ளது ஆகவே அந்தப் பணிகளை நாங்கள் தொடர்ச்சியாக 2024லே புதிய உத்வேகத்தோடு இன்னும் மக்கள் நலனோன்பு திட்டங்களை மக்கள் காலடிக்கு கொண்டு சேர்ப்பதற்கு விரிவான வேலை திட்டங்களை நாங்கள் தொடங்க இருக்கின்றோம் அதற்கு மாற்றுக் கருத்து இடமில்லை.
இம்முறை எம்மை பொறுத்த அளவுக்கு தமிழர் கழகத்தை பொறுத்த அளவுக்கு கிழக்கு மாகாணத்தில் எமது மக்களினுடைய இன இருப்பை உறுதிப்படுத்துவதற்கான எமது அரசியல் பயணத்திலே ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக எமது மக்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும் என்கின்ற அடிப்படை கொள்கையிலே நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள் அதை நிறைவேற்றுவதற்காக முடிந்த அளவு வேலை செய்கின்றோம்.
எங்களுடைய கழகத்தை பொறுத்த அளவிற்கு உரிமையுடன் கூடிய அபிவிருத்தி சார் அரசியல் உரிமையும் அபிவிருத்தியும் நமது இரண்டு கண்களாக பார்க்கின்றோம் நிச்சயமாக இந்த 2024 கடந்த வருடத்தைப் போல கடந்த காலங்களைப் போல எங்களுடைய மக்களுடைய உரிமை சார்ந்த விடயங்களுக்கும் அபிவிருத்தி சார் விடயங்களுக்கும் கூடுதலான முன்னுரிமை வழங்கி எங்களுடைய முற்போக்கு தமிழர் கழகமும் நாங்களும் செயல்படுவோம் என்பதனை இந்த இடத்தில் கூறிக் கொள்கிறேன்.
ஊடக நண்பர்களுக்கும் இந்த இடத்திலே நன்றியை கூற கடமைப்பட்டு இருக்கின்றேன் காரணம் இந்த மாவட்டத்திலே பட்டிதொட்டி மூலை முடுக்கு எங்கெல்லாம் மக்களுடைய பிரச்சினைகள் நடந்தாலும் அவற்றை தேசியம் தாண்டி சர்வதேசம்வரை கொண்டு செல்கின்ற மகத்தான பணியினை அர்ப்பணிப்போடு செய்கின்ற இந்த மாவட்டத்தினுடைய அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இந்த இடத்திலேயே புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அனைத்து மக்களுடைய ஆரோக்கியத்திற்காகவும் அவர்களுடைய சலிப்புக்காகவும் மீண்டும் இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
புதிய ஆண்டில் நானும் இன்று காலை ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்திருக்கின்றேன் ஏனென்றால் இந்த புதிய ஆண்டில் மக்களுக்கான விரிவான வேலை திட்டங்களை மக்கள் காலடிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நாட்டினுடைய ஜனாதிபதி பிரதமர் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுருக்கின்ற இந்த வேளையில் அது செயற்பாட்டு ரீதியாக வர வேண்டும்.
மக்களினுடைய சுமைகளை குறைப்பதாக அமைய வேண்டும் அதைத்தான் நாங்களும் கூடுதலாக இறங்கி வேலை செய்கின்றோம் அதுதான் நோக்கம் அந்த அடிப்படையில் தான் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் அமையும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.