Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆறு மாதங்களுக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும்: வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன உறுதி!

ஆறு மாதங்களுக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும்: வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன உறுதி!

3 years ago
in செய்திகள்

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வடக்கில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் என வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விசேட நடவடிக்கை அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு தற்போது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

நாடளாவிய ரீதியில் தற்போது மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிரான விசேட நடவடிக்கை வடக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு ஆகியவற்றில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுகின்றனர்.

அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையால் வடக்கில் 90 சதவீதம் குற்றச் செயல்கள் சடுதியாகக் குறைந்துள்ளன.

குற்றச் செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புடையவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் செயற்பாடுகளை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளனர்.

அதற்குரிய நடவடிக்கைகள் வடக்கிலும் முன்னெடுக்கப்படுகின்றது. போதைப்பொருள் விற்பனை செய்வோர் தொடர்பாக 0718598834 (யாழ்ப்பாணம்), 0718598835 (காங்கேசன்துறை), 0718598836 (வவுனியா), 0718598837 (மன்னார்), 0718598838 (கிளிநொச்சி), 0718598839 (முல்லைத்தீவு) என்ற இலக்கங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த இலக்கங்களுக்கு அழைப்பெடுப்பவர்களின் விவரங்கள் தெரியவராது. அதனால் அச்சமின்றி தகவல்ளை வழங்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திலும் நேரடியாக முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
71 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய கூட்டணி; ஜனாதிபதிக்கே முழுமையான ஆதரவு!

71 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய கூட்டணி; ஜனாதிபதிக்கே முழுமையான ஆதரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு