உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சியானது மட்டக்களப்பு சீலாமுனை young star மைதானத்தில் இன்று (11.04.2023) காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்றைய தினத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு 9000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இந்நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. சி. புவனேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.