வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின் விளக்கமறியல் வெள்ளிக்கிழமை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு 05ம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் அச்சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர்.
இதற்கமைய நேற்று (08) குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்க தலைவிக்கு வெள்ளிக்கிழமை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.