இலங்கையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் சிறைக்கூடங்களிலும் உட்பகுதிகளைத் தெளிவாகக் கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்படும் சந்தேகநபர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அநீதியான செயற்பாடுகளைத் தடுப்பதுடன், பார்வையாளர்கள் ஊடாகச் சட்டவிரோதப் பொருட்கள் இரகசியமாகக் கடத்தப்படுவதைக் கண்டறிவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், சிறைக்கூடங்களின் உட்பகுதிகளைத் தெளிவாகக் கண்காணிக்கும் வகையில் இந்தக் கமராக்கள் பொருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.







